ஏகஇறைவனின் திருப்பெயரால்....
சமீப காலமாய் தொலைக்காட்சி, இன்டர்நெட், செல்போன் மூலம் பரவும் ஆபாசத்தால் நிலை குலைந்து போயுள்ளனர் இளைஞர் சமுதாயம்.
பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை எப்பொழுது பள்ளிக் கூடத்திற்கு அனுப்புவோம், எப்பொழுது கல்லூரி திறப்பார்கள் என்று விடுமுறை நாட்களில் வயிற்றில் நெருப்பைக் கட்டி வைத்திருப்பது போல் இருப்பாப்பார்கள். கல்வியுடன் ஒழுக்கத்தையும் சேர்த்துக் கற்பிக்கும் கலாசாலை கல்லூரி என்பதால் கல்லூரி தான் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு என்று கல்லூரிக்கு பிள்ளைகளை அனுப்பியப் பின்னரே அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். அந்தக் காலம் மலை ஏறிப் போய் எப்பொழுது கல்லூரிப் படிப்பு முடியும் எப்பொழுது கல்லூரிக்கு முழுக்குப் போடுவார்கள் என்று ஏங்கும் காலம் இப்பொழுது உருவாகி விட்டது. அந்தளவுக்கு கல்வி பயிலும் கலாசாலைக்குள்ளும் ஆபாச கலாச்சாரம் தறிகெட்டுப் புகுந்து விட்டது.
இதற்கெல்லாம் காரணம் காசே கர்மமாய் செயல்படும் கல்லூரி நிர்வாகம் என்றால் மகையாகாது கல்விப் பயில வரும் மாணவ, மாணவிகள் என்ன லட்சனத்தில் கல்வி பயிலுகின்றனர் என்பதை முறையாக கவனிப்பதில்லை. கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரிய, ஆசரியைகள் என்;ன லட்சனத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி பயிற்றுவிக்கின்றனர் என்பதையும் கவனிப்பதில்லை. கல்லூரி முடிந்தப் பின் கல்லூரியைப் பராமரிக்கும் வாட்ச்மேன்கள், கேட் கீப்பர்கள் என்ன லட்சனத்தில் கல்லூரியைப் காதுகாக்கின்றனர் ஹாஸ்டலில் தங்கி இருக்கும் மாணவ, மாணவிகளை எவ்வாறு கண்காணிக்கின்றனர் என்பதையும் கவனிப்பதில்லை.
ஹாஸ்டல் வாசலில் ரூல்அன்ட்ரெகுலேஷன் ஏஃபோர் சைஸ் பேப்பரில் எழுதி ஒட்டப்பட்டு மட்டுமே இருக்கும் அது ஒரு ஏட்டுச் சுரைக்காய் என்பதை அறிந்த மாணவ, மாணவிகள் அதில் எழுதி தடுக்கப்பட்டுள்ளதை விட அதிகமாக ஹாஸ்டலில் அனுபவிக்கின்றனர்.
சமீபத்தில் கும்மிடிப் பூண்டி அருகே பாதிரிவேடு என்ற கிராமத்தில் இயங்கும் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் விடுமுறை விடப்பட்ட சனிக்கிழமை அன்று ப்ளஸ் டூ பயிலும் ஐந்து மாணவர்களும், ப்ளஸ் ஒன் பயிலும் இரண்டு மாணவிகளும் தங்களுடைய திட்டத்தை நிறைவேற்ற மேல்படி பள்ளியின் மொட்டை மாடியைப் பயன்படுத்தி இருக்கின்றனர் இது எவ்வளவு நாளாக நடந்து வருகிறது என்பது யாருக்கும் தெரிவில்லை. அன்று நடந்ததும் யாருக்கும் தெரிந்திருக்காது அன்றைய சம்பவம் மாணவர்களில் சிலர் தங்களுடைய செல்போனில் பதிந்து அதை புளூடூத் மூலம் பரவச் செய்ததால் சம்பவம் வெளியே கசிந்து ஐந்து மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் டிசி கொடுத்து அனுப்பப்பட்டிருக்கிறது.
இதை அறிந்த பொதுமக்கள் இதற்கு காரணமான அந்த இரண்டு மாணவிகளையும் வெளியேற்ற வேண்டும் என்றும் பள்ளியைப் பராமரிக்க வாடச்மேன் இட வேண்டும் என்றுக் கூறி கல்லூரி முன் குழுமி கோஷம் எழுப்பி இருக்கின்றனர். இதை அறிந்ததும் சினிமா க்ளைமாக்ஸில் போலீஸ் வருவது போல் அந்த ஊர் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி ராமச்சந்திரன் விரைந்து வந்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்களித்து மக்களை கலைந்து செல்ல வலியுருத்தி உள்ளார் (அதற்கு முன் மேல்படி கல்லூரி இந்த லட்சனத்தில் இருப்பது தெரியாது போலும்(?).
சுமார் பதினைந்து கிராமங்களிலிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயிலும் இந்தக் கல்லூரி விடுமுறை நாட்களில் திறந்தே கிடக்கிறது என்றால் இதில் வேறு எதோ மரமம் புதைந்திருப்பதாகத் தோன்றுகிறது.
எது எப்படியோ இனிமேல் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் விடுமுறை நாட்களில் கோச்சிங் கிலாஸ் இருக்கிறது என்றோ இன்னும் வேறுப் பலக் காரணங்களைக் கூறியோ பள்ளிக்கு செல்வதாகக் கூறினால் கண்டிப்பாகப் பின் தொடருங்கள் கல்லூரி முடிந்து தாமதமாக வந்தாலும் கவனியுகங்கள்.
வெளி ஊரில் தங்கிப் பயிலும் பிள்ளைகளை வார விடுமுறை இரண்டு நாட்களில் ஊருக்கு வரச்சொல்லி உத்தரவிடுங்கள் வாரத்தில் அல்லது மாதத்தில் ஒரு முறையாவது சென்று சூற்றுச் சூழலைக் கவனியுங்கள். கவனிக்கத் தவறினால் கற்பிழப்பது முதல் கஞ்சா, அபின் பழக்கம் வரை தொற்றிக் கொண்டால் அவைகளிலிருந்து மீட்பது கடினமாகி விடலாம் அதனால் வரும் முன் காப்போம்.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்